சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வரும் மார்க்கத்தில் ரயில் தண்டவாளத்தில் சிமெண்டு கல் ஒன்றை தண்டவாளத்தில் வைத்து ரயில் வருகைக்காக காத்திருந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் தண்டவாளத்தின் மீது இருந்த கல்லை அகற்றினர். பின்னர் அந்த நபரை ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் வேலூரை சேர்ந்த சிவக்குமார் (வயது 23) என்பதும் இவரது பெற்றோர்கள் இரண்டு வருடத்திற்கு முன்பு இறந்ததும் தெரிய வந்தது.
சிமெண்ட் கல்லில் இருக்கும் கம்பியை எடுக்க தண்டவாளத்தில் வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.