கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த சுரேஷ்( 28) என்ற இளைஞருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரல்வாய்மொழியில் திருமணம் நடந்தது.
தகவல் அறிந்த குமரி மாவட்ட சமூக பாதுகாப்பு மற்றும் குழந்தைககள் நல அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்ததும், சட்டவிரோதமாக சுரேஷ் குடும்பம் நடத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் சிறுமியை மீட்டு நாகர்கோவில் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சுரேஷ் மீது குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சிறுமியின் பெற்றோர் மற்றும் சுரேஷின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
