Thursday, August 14, 2025
HTML tutorial

உங்க ‘Bank Account’ கிளோஸ் ஆயிடும்! ‘RBI’ கொடுத்த வார்னிங்! உடனே இதை செய்யுங்க !

ரிசர்வ் வங்கி தற்போது பல வங்கிக் கணக்குகளை மூட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த முடிவு ஏன் எடுக்கப்பட்டது? யாருடைய கணக்குகள் மூடப்படப் போகின்றன? நமக்கு என்ன செய்ய வேண்டியது? என்ற கேள்விகளுக்கு இப்போ தெளிவான பதில் கிடைக்கப்போகிறது.

சமீப காலங்களில் இணையவழி மோசடிகள் அதிகரித்து வருகிறது. இது நாட்டின் நிதி நிலைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை தடுக்கத்தான் ரிசர்வ் வங்கி – அதாவது ஆர்பிஐ – ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதாவது – KYC, அதாவது Know Your Customer விவரங்கள் சரியாக இல்லாத வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் மூடப்படலாம்.

இது யாரெல்லாம் பாதிக்கப்போகின்றது என்றால்:

  • பான் கார்டு (PAN) விவரங்களை வங்கியுடன் இணைக்காதவர்கள்
  • வாக்காளர் அடையாள அட்டையை வழங்காதவர்கள்
  • வங்கி கணக்கில் சந்தேகமான பரிவர்த்தனைகள் நடைபெறும் விவரங்கள் உள்ளவர்கள்
  • KYC செய்திருந்தாலும் அதை காலாவதியாக விட்டவர்கள்

இவர்களின் கணக்குகள் மூடப்படலாம். ஒருசிலருக்கு அவர்கள் சேமித்திருந்த பணமும் திருப்பிக் கிடைக்காமல் போயிருக்கின்றது என்று புகார்கள் வந்துள்ளன. இதெல்லாம் உண்டாகக் கூடாது என்பதற்காகவே, வாடிக்கையாளர்களுக்கு முன்னேற்பாடு எடுக்க சொல்லப்பட்டிருக்கிறது.

நாம் என்ன செய்ய வேண்டும் என்றால்:

  1. உடனடியாக உங்கள் வங்கியை தொடர்புகொண்டு, உங்கள் KYC விவரங்களை புதுப்பிக்க வேண்டும்.
  2. பான் கார்டு, ஆதார், வாக்காளர் அட்டை போன்ற அடையாள ஆவணங்களை சரியாக சமர்ப்பிக்க வேண்டும்.
  3. Form 16 போன்ற வருமான வரி சம்பந்தமான ஆவணங்களை வழங்க வேண்டும்.
  4. வங்கியிலிருந்து வரும் எச்சரிக்கை தகவல்களை தவிர்க்காமல் கவனிக்க வேண்டும்.

இது எல்லாம் செய்து விட்டால், உங்கள் வங்கிக் கணக்கு பாதுகாப்பாக இருக்கும். மேலும், போலி பரிவர்த்தனைகளை தடுக்க, வங்கிகள் AI தொழில்நுட்பத்தை (Artificial Intelligence) பயன்படுத்த இருக்கின்றன. இதனால் இணையக் குற்றங்கள் குறையும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

வங்கிகளும், ரிசர்வ் வங்கியும் நம்ம பணத்தை பாதுகாக்கவே இந்த முடிவுகளை எடுத்து வருகின்றன. ஆகையால் பயப்பட வேண்டியதில்லை – ஆனால் தாமதிக்காமல் உங்கள் KYC விவரங்களை புதுப்பிக்கவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News