Saturday, July 26, 2025

சென்னையில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த இளம்பெண் கைது

சென்னையில் குழந்தைகளை கடத்தி பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக சமீபத்தில் ஒரு ஆடியோ வெளியானது. இதனை வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் வித்யா என்ற இளம்பெண்ணை புழல் போலீசார் கைது செய்தனர்.

வித்யாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தைகளை கடத்தி குழந்தை இல்லாத தம்பதிகளிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பேரம் பேசி விற்பனை செய்து வந்தது தெரிந்தது. மேலும் கடத்தி வைக்கப்பட்டு இருந்த 2 குழந்தைகளை போலீசார் அதிரடியாக மீட்டனர்.

கைது செய்யப்பட்ட வித்யாவிடம் குழந்தை கடத்தல் தொடர்பில் உள்ள மற்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news