கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சில்க் போர்டு சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் துரத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பெங்களூரு மக்களிடையே கடும் கண்டனத்தை உருவாக்கியுள்ளது.
இரவு 10 மணியளவில் நடந்த இந்த சம்பவம், பின்னால் வந்த ஒரு காரில் பொருத்தப்பட்டிருந்த டாஷ்போர்டு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இது பெங்களூரு காவல்துறையின் கவனத்திற்குச் சென்றது. உடனடியாக போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி, சம்பந்தப்பட்ட இளைஞர்களை தேடும் பணியை தொடங்கினர்.
இதையடுத்து அந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
