கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சரல்குன்னு பகுதியைச்சேர்ந்தவர் ஜெயேஷ் (29). இவருடைய மனைவி ரஷ்மி (23). இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
ரஷ்மி அந்த வாலிபரை, நாம் உல்லாசமாக இருக்கலாம் எனக்கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். அதை நம்பிய அந்த வாலிபர், ரஷ்மியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த ரஷ்மியின் கணவர் ஜெயேஷ், அதை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.
இதையடுத்து ஜெயேஷ் மற்றும் அவரது மனைவி ரஷ்மி இருவரும் அந்த வாலிபரை மிரட்டி பணத்தை பறித்துள்ளனர். அதோடு விடாமல் அந்த வாலிபரின் கைகளை கட்டித்தொங்கவிட்டு மர்ம உறுப்பில் 26 ‘ஸ்டேப்ளர் பின்’களை அடித்து, அவரது கை விரல் நகங்களை பிடுங்கி சித்ரவதை செய்துள்ளனர்.
தகவலறிந்த போலிசார் வாலிபர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து ஜெயேஷ், அவரது மனைவி ரஷ்மியை கைது செய்தனர். இந்த விசாரணையில் ரஷ்மி பணத்திற்காக வாலிபர்களிடம் ஆசை வார்த்தை கூறி மயக்கி, அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து வந்ததும், அவருக்கு உடந்தையாக அவரது கணவர் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
