Friday, December 12, 2025

17 வயதிலேயே உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்

ஆஸ்திரேலிய இளம் வீரர் ஒருவர் பயிற்சியின்போது, கழுத்தில் பந்து பட்டு, களத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மெல்போர்னில் உள்ள ஃபெர்ன்ட்ரீ கல்லி கிளப் அணிக்காக விளையாடிய பென் ஆஸ்டின், கடந்த செவ்வாய்கிழமை மாலை நடைபெற்ற நெட்பிராக்டீஸ் பயிற்சியின் போது பந்து அவரது கழுத்துப் பகுதியில் நேரடியாகப் பட்டது. அதிர்ச்சியுடன் தரையில் விழுந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மருத்துவர்களால் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. வியாழக்கிழமை மாலை மருத்துவர்கள் பென் ஆஸ்டின் மரணத்தை உறுதி செய்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related News

Latest News