Friday, December 26, 2025

“2026 ல் நீங்க தான் CM” : வைரலாகும் விஜய்யின் போஸ்டர்

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இதற்கான முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின்  கூட்டங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் திமுக அரசையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். 

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கூட்டணி வைக்க உள்ளதாகவும தகவல்கள் பரவி வருகின்றன. 

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிறந்த நாள் விழா வரும் 22-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக, மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், அம்பேத்கர், பெரியார் ஆகியோர் விஜய்யை வாழ்த்துவது போலவும், அதில், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நீங்கள் தான் முதல்வர் என்று அச்சிப்பட்டுள்ளது.

Related News

Latest News