Saturday, April 5, 2025

நீங்களும் 24 வயதில் 4,300 கோடிக்கு அதிபர் ஆகலாம்! இதை மட்டும் செய்யுங்க போதும்?

வாய்ப்பிற்காக ஏங்காதீர்கள்…..வாய்ப்புகளை உருவாக்குங்கள் … உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்த வரிக்கு சொந்தக் காரர் ஆதித் பாலிச்சா….உங்களுக்கு தெரியுமா? இந்தியாவிலேயே 24 வயதில் பல கோடிக்கு அதிபராக இளைஞர்கள் மத்தியில் உலா வருபவர் தான் இந்த இளம் கோடீஸ்வரர்…..

உலகிலேயே தலைசிறந்த பல்கலைக்கழகமான ஸ்டான்போர்ட்டில் கணினி அறிவியல் படிப்பதற்காக சேர்ந்த அவர், கொரோனா தொற்று பரவலால் பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார். அதன் பிறகு தனது நண்பனான கைவல்யா வோஹ்ரா உடன் இணைந்து 2021ம் ஆண்டு ZEPTO என்னும் அதிவிரைவில் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனத்தை தொடங்கினார். ZEPTO நிறுவனம் பிக்பாஸ்கெட், Dunzo மற்றும் அமேசான் போன்ற முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்தது.

2024 ஆம் ஆண்டுக்கான கணிப்பின்படி, இ-காமர்ஸ்-இல் இந்த நிறுவனத்தின் மதிப்பு 1.4 பில்லியன் டாலர்களை, அதாவது 1,600 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இவ்வளவு பெரிய மதிப்பை நம்புவது சிரமமாக இருக்கலாம். ஆனால் அதற்கும் மிகுந்த ஆச்சரியமான செய்தி என்னவென்றால், 23 வயதான ஆதித் பாலிச்சாவின் மொத்த சொத்து மதிப்பு தற்போது 43 ஆயிரம் கோடியை  கடந்துவிட்டது.

ஆதித் பாலிச்சா எடுத்த எடுப்பிலேயே ஸெப்டோவை வெற்றிகரமானதாக மாற்றவில்லை. சிறுவயது முதலே கைவல்யா வோஹ்ரா, ஆதித் இருவரும் நண்பர்கள். இவர்கள் ஆன்லைனில் மளிகைப் பொருட்களை விநியோகம் செய்யும் கிரானாகார்ட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை மும்பையில் தொடங்கினர். இந்நிறுவனம் 10 மாதங்கள் மட்டுமே நீடித்தது. அதற்கு முன்னதாக GoPool உடன் இணைந்து ஸ்டார்டப் நிறுவனத்தை தொடங்கினார். அதுவும் தோல்வி அடைந்தது. இப்படி அடுத்தடுத்த தோல்விகளுக்குப் பிறகும் துவண்டுவிடாமல் ஆதித் மேற்கொண்ட விடாமுயற்சி தான் இன்று ஸெப்டோ வடிவில் விஸ்வரூப வெற்றி அடைந்துள்ளது.

நீங்களும் நிச்சயம் இவரைப் போல் ஆகலாம்….ஆனால் கடினமான உழைப்பும் …எடுத்துக் கொண்ட முடிவில் தீவிரமான முனைப்புடன் இருக்க வேண்டும் ….. இங்கு எதுவுமே சுலபம் கிடையாது….. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் 24 வயது என்ன எந்த வயதில் வேண்டுமானாலும் எத்தனை கோடி வேணாலும் சம்பாதிக்கலாம்….. முடங்கி கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறை பிடிக்கும்….எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்….!!!

Latest news