Saturday, December 20, 2025

‘பொண்டாட்டி சொன்னா கேக்கணும்’., முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பேரறிஞர் அண்ணா பெயரிலான திருமண மண்டபத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:

’’கொளத்தூர் என்ற பெயர் சொன்னாலே அது சாதனை அல்லது ஸ்டாலின் என்று நியாபகம் பெரும் அளவுக்கு தொகுதியுடன் கலந்துள்ளேன். ஏராளமான திட்டங்களை இந்த தொகுதிக்கு வழங்கியுள்ளேன். பத்து நாளைக்கு ஒரு முறை கொளத்தூர் தொகுதிக்கு வந்தால்தான் முழு திருப்தி கிடைக்கிறது.

திமுக அரசின் திட்டங்கள் எப்போதும் மக்கள் மனதில் பேசும் அளவுக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் நினைத்தால் எதையும் செய்ய கூடியவர்கள். அதனால்தான் அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண்தான் உள்ளார். என்னுடைய வெற்றிக்கு பின்னாலும் என் மனைவிதான் உள்ளார்.

மிசா கைதியாக சிறையில் இருந்த போது எவ்வளவோ கொடுமைகள் அனுபவித்தேன். அப்போது எனக்கு உறுதுணையாக இருந்தது என் மனைவிதான். பொண்டாட்டி சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டும்’’.

இவ்வாறு அவர் பேசினார்.

Related News

Latest News