தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் ரேஷன் கார்டு குறைதீர் முகாம், விவசாயிகளுக்கான குறைதீர் முகாம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு தொடர்பான புகார்களை தெரிவிக்க குறைதீர் முகாம்களை மாதந்தோறும் நடத்துகிறது. இதில் பொதுமக்கள் தங்களுக்கான குறைகளை மனு எழுதிக் கொடுத்து ஒரே நாளில் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.
அந்தவகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம். இந்தக் முகாம் வரும் 25 ஆம் தேதி நடக்க உள்ளது.
25.07.2025 அன்று மாலை 4.00 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் மாவட்ட எரிவாயு முகவர்களுடன் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட கூட்டத்திற்கு எரிவாயு நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.