Monday, December 1, 2025

வீட்டில் இருந்தே இதை மாற்றலாம்., ஆதாரில் வந்த புது வசதி

இதுவரை ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்ற, ஆதார் பதிவு மையத்திற்கு சென்று படிவம் நிரப்பி, கட்டணம் வழங்கி, வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது mAadhaar செயலி மூலம் வீட்டிலிருந்தே மொபைல் எண்ணை மாற்றுவது மிகவும் எளிதாகியுள்ளது.

புதிதாக, mAadhaar செயலியில் நீங்கள் ஆதார் எண் மற்றும் புதிய மொபைல் எண்ணை உள்ளிட்டு, OTP மூலம் இணைய உறுதி செய்ய வேண்டும். பின்னர்,முகத்தை ஸ்கேன் செய்து, அது ஆதார் தரவுடன் பொருந்தினால், புதிய மொபைல் நம்பர் உடனடியாக அப்டேட் செய்யப்படும்.

இந்த முறையால், மையத்திற்கு செல்வதற்கான நேரம், வரிசை, பயணச் செலவு போன்ற சிரமங்கள் நீங்கும். மேலும், முக அங்கீகாரம் பாதுகாப்பை அதிகரிக்கும்.

முக்கியமான படிகள்:

  • mAadhaar செயலியை பதிவிறக்கம் செய்யவும்
  • “Update Mobile Number” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
  • ஆதார் எண் மற்றும் புதிய மொபைல் எண்ணை உள்ளிடவும்
  • OTP-ஐ சரிபார்க்கவும்
  • முக அங்கீகாரம் மூலம் அஞ்சல் உறுதி செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News