Saturday, December 20, 2025

“ஈரோடு வரைக்கும் வந்தீங்களே கரூருக்கு போக மாட்டீங்களா..? – விஜய்க்கு எதிராக போஸ்டர்கள்

ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இந்நிலையில் விஜய்க்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் “ஈரோடு வரைக்கும் வந்தீங்களே கரூருக்கு போக மாட்டீங்களா..?, இங்க இருக்க கரூருக்கு போகல, ஆனா ஆடியோ லாஞ்ச்க்கு மலேசியா போறீங்களா? What Bro Its Very Wrong Bro.” என விஜய்யின் வருகைக்கு எதிராக ஈரோடு நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Related News

Latest News