Friday, October 10, 2025

7 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை…

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், இதனைப்போலவே, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு கேரளப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால், வெள்ளிக்கிழமை (அக்.10) முதல் அக்.15 வரை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (அக். 10) ‘மஞ்சள்’ எச்சரிக்கை கொடுத்து பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதனைத் தொடா்ந்து, நாளை சனிக்கிழமை (அக். 11) நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், இந்த 11 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 10) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை:

அதாவது, தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் இன்று (அக். 10) சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News