திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது.
இந்நிலையில் நூலின் விலை அனைத்து ரகங்களிலும் ரூ.3 உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நூல் விலை ஏற்றம் இல்லாமல் இருந்த நிலையில் திடீரென நூல் விலை ரூ.3 உயர்ந்துள்ளதால் தொழில் துறையினர் அதிர்ச்சிடைந்துள்ளனர்.