Friday, February 21, 2025

மகாராஷ்டிராவில் ஷிண்டே எம்.எல்.ஏக்களின் Y பிரிவு பாதுகாப்பு வாபஸ்

மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜக மற்றும் ஷிண்டே சிவசேனா இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஷிண்டே சிவசேனா கட்சியின் 20 எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பு அதிரடியாக வாபஸ் பெறப்பட்டிருப்பது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக, ஷிண்டே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகாயுதி கூட்டணி ஆட்சியில் இருந்து வருகிறது. இந்நிலையில் மகாயுதி கூட்டணியின் முக்கிய கட்சியான ஷிண்டே சிவசேனா கட்சியின் 20 எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்பட்டு வந்த Y பிரிவு பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஷிண்டே சிவசேனா கடும் கொந்தளிப்பில் இருக்கிறது.

Latest news