Thursday, July 31, 2025

WTC Final 2023: ‘இந்தியா ஜெயிக்கணும்னா’…அவர் அதிரடி காட்டணும்: ரோஹித்தின் துருப்பு சீட்டு குறித்து பாண்டிங் கருத்து..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-2023 தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் அனைத்தும் நடந்து முடிந்து இறுதிப் போட்டி மட்டும்தான் எஞ்சியிருக்கிறது.

லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, ஆஸ்திரேலிய அணிள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்த இறுதிப் போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் கிட்டதட்ட 20 வருடங்களுக்கு பிறகு ஐசிசி பைனலில் மோத உள்ளதால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, 2003ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்று கோப்பையை தட்டித்தூக்கியது. தற்போது, அதற்கு பதிலடி கொடுக்க அருமையாக வாய்ப்பு கிடைத்துள்ளது.இந்நிலையில், இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 17 மாதங்களுக்கு பிறகு அஜிங்கிய ரஹானே டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்பட உள்ளார். சமீபத்தில் ரஞ்சிக் கோப்பையில் அசத்திய ஜெய்தேவ் உனாத்கட், ஷர்தூல் தாகூர் போன்றவர்களும் இடம்பிடித்துள்ளனர். காயம் காரணமாக, பும்ரா பைனலில் இருந்து விலகியுள்ளார். ஷ்ரேயஸ் ஐயரும் இடம்பெறவில்லை..

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News