பிரேசிலைச் சேர்ந்த Viatina-19 FIV என்ற பசு சுமார் ரூ.40 கோடிக்கு ஏலம் போயுள்ளது. 1100 கிலோ எடை கொண்ட இந்த பசுவானது உலகின் விலையுயர்ந்த பசு என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.
இந்த விலைக்கு காரணம் இந்த பசுவானது கடும் வெப்பம் மற்றும் கடும் குளிர் என எந்த காலநிலையிலும் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. இந்த மாடு இந்திய இனமான நெல்லூர் இனத்தைச் சேர்ந்தது.