உலகின் மிக நீளமான தொங்குபாலம் துருக்கி நாட்டில் திறக்கப்பட்டது.

417
Advertisement

உலகின் மிக நீளமான தொங்குபாலம் துருக்கி நாட்டில் திறக்கப்பட்டுள்ளது.

முக்கிய நீர்வழிப் பாதையான ஐரோப்பிய மற்றும் ஆசியக் கரைகளை இணைக்கும் டார்டனெல்லஸ் ஜலசந்தியில், பெரிய தொங்கு பாலத்தை துருக்கியின் அதிபர் மற்றும் தென் கொரிய பிரதமர் இருவரும் திறந்து வைத்தனர்.

இந்த தொங்கு பாலம், இரு கோபுரங்களுக்கு இடையே 2 ஆயிரத்து 23 மீட்டர் இடைவெளியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இது துருக்கியின் வடமேற்கு மாகாணமான கனக்காலேயின் ஐரோப்பியப் பகுதியில் அமைந்துள்ள கெலிபோலு நகரத்தையும், ஆசியப் பக்கத்தில் உள்ள லாப்செகி நகரத்தையும் இணைக்கிறது.

ஏஜியன் கடலை மர்மாரா கடலுடன் இணைக்கும் டார்டனெல்லை படகின் மூலமாக பயணிகள் கடக்க 5 மணி நேரம் ஆகும் நிலையில், இந்த பாலத்தின் மூலம் பயண நேரமானது 6 நிமிடங்களாக குறைந்துள்ளது.