Wednesday, March 12, 2025

இதுவே உலகின் மிகப்பெரிய face mask

தைவானைச் சேர்ந்த மருத்துவ நிறுவனம் ஒன்று உலகின் மிகப்பெரிய அறுவை சிகிச்சை முகக்கவசத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இது சராசரியை விட 50 மடங்கு பெரியது, கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் முகக்கவசம் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இது உருவாக்கப்பட்டதாக தெரிவித்து உள்ளது அந்த நிறுவனம் .

காணொளி வாயிலாக இதனை உறுதி செய்தார் கின்னஸ் உலக சாதனை நடுவர் ஒருவர். கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இதற்கான யோசனை வந்ததாக இந்த முகக்கவசத்தை உருவாக்கியுள்ள மோடெக்ஸ் ஹெல்த்கேர் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest news