கட்டுரையாளர் : மல்லை சி ஏ சத்யா (மதிமுக துணை பொதுச் செயலாளர்)
1947 ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திரத்திற்கு ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 14 அன்று இஸ்லாம் மதம் சார்ந்து கிழக்கு வங்கத்துடன் இணைந்து ஒரு நாடாக பாகிஸ்தான் விடுதலைப் பெற்றது.
ஆட்சி மொழி
விடுதலைப் பெற்ற பாகிஸ்தான் நாட்டின் அரச மதம் இஸ்லாம் என்ற அறிவிப்பில் மகிழ்ச்சி கைத்தட்டல் ஆராவரம் வின்னைப் பிளந்தது. தொடர்ச்சியாக தேசியப் பறவை, விளங்கு, மரம், பூ அதே ஆரவாரம். இந்தியாவில் இருந்து விடுதலைப் பெற்ற பாகிஸ்தானத்தின் ஆட்சி மொழி உருது என்ற போது ஆராவரம் அடங்கியது. சலசலப்பு ஏற்பட்டது. காரணம் பாகிஸ்தானத்தின் மேற்கு பகுதி மக்கள் பேசும் மொழி உருது கிழக்கு பாகிஸ்தானத்தின் மக்கள் பேசும் மொழி வங்கம். வங்கமொழி ஆட்சி மொழி பட்டியலில் சேர்க்கப்பட வில்லை. இதுகுறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. எங்களின் வங்க மொழியும் பாகிஸ்தானத்தின் ஆட்சி மொழி என்றால் ஒன்று பட்ட பாகிஸ்தான் இல்லை. உருது மொழி மட்டுமே ஆட்சி மொழி என்றால் நாட்டுப் பிரிவினைதான். இரண்டு மொழிகளும் ஆட்சி மொழி என்றால் ஒன்று பட்ட பாகிஸ்தான் இல்லை ஒன்றை மொழி உருது மட்டுமே என்றால் இரண்டு நாடுகள் என்று கிளர்ச்சிக்கு அடிகோளியது.
இயக்கம்
இதன் காரணமாக வங்க மொழி இயக்கம் உருவாக்கப்பட்டது. போராட்டத் திட்டங்கள் வகுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தானத்தின் ஆட்சி மொழியாக வங்கமொழியும் ஆட்சி மொழி பட்டியலில் சேர்ப்பதற்கு அறிவிப்பு வந்தது. ஆனால் காலம் கடந்துவிட்டது. காரணம் வங்க மொழி இயக்க கோரிக்கை பெளதீக சக்தியாக மாறி மக்கள் போராட்டமாக வலுப்பெற்று போராட்டக் காரர்களின் கை ஒங்கி இருந்தது.
துப்பாக்கிச் சூடு
அறப்போராட்டம் கிளர்ச்சியாக மாறி வன்முறை வெடித்தது. பாகிஸ்தான் இராணுவத் தாக்குதலில் நான்கு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். துப்பாக்கி சூட்டிற்கு பின்னர் அமைதிக்கு பதிலாக போராட்டம் கொழுந்து விட்டு எரிந்தது. பாகிஸ்தான் தாக்குதலில் இருந்து தப்பிக்க மதரீதியாக பிரிந்த கிழக்கு வங்கமக்கள் மொழி ரீதியான இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ஏதிலிகளாக லட்சக்கணக்கில் தஞ்சம் அடைந்தனர். பாகிஸ்தானாத்தின் உள்நாட்டு பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாறியது.
காவல்துறை
வங்க மொழி பேசும் மக்கள் மீதான தாக்குதலைத் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்ற மேற்கு வங்கமக்கள் போராட்டக் களத்திற்கு வீதிக்கு வந்தனர். வங்கமொழிப் போராட்டம் மேற்கு வங்க அரசின் பிரச்சனையாக மாறி இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் இந்திய அரசு வங்காளிகளை பாதுகாக்க இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டும், இல்லை என்றால் மேற்கு வங்க மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையை அனுப்புவோம், என்று மாநில அரசின் முதலமைச்சர் சொன்னபோது இந்திய அரசு வேறு வழியில்லாமல் இந்திய இராணுவம் கிழக்கு பாகிஸ்தானில் நுழைந்தது.
போர்
தங்கள் உள்நாட்டு பிரச்சினையில் இந்திய தலையிடுவதை பாகிஸ்தான் அரசு ஐநா மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது. பயன் இல்லை. இந்திய பாகிஸ்தான் போர் மூண்டது பத்தே நாளில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய இராணுவம் வெற்றி வாகை சூடியது. ஒரு லட்சம் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் சரணடைந்தனர். பாகிஸ்தானத்தில் இருந்து விடுதலைப் பெற்று கிழக்கு பாகிஸ்தான் சுதந்திர இறையாண்மை கொண்ட வங்கதேசமானது வங்க மொழி ஆட்சி மொழியானது.
உலகத் தாய்மொழி தினம்
விடுதலைப் பெற்ற சுதந்திர இறையாண்மை கொண்ட வங்கதேசத்தின் பிரதிநிதியாக ஐநா மன்றத்தில் 1998 ஆம் ஆண்டு அறிஞர் ரபீக் இஸ்லாம் அவர்கள், தங்கள் தாய் மொழி போராட்டத்தை எடுத்துச் சொல்லி பிப்ரவரி 21 ஆம் நாளை தாய்மொழி தினமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இறையாண்மை கொண்ட நாட்டு பிரதிநிதியின் கோரிக்கையை ஏற்று 1999 ஆம் ஆண்டு ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பு பிப்ரவரி 21 ஆம் நாளை உலகத் தாய்மொழி தினமாக அறிவித்தது.
2000 ஆண்டில் இருந்து உலகத் தாய்மொழி தினம் 25 ஆண்டுகள் கால்நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.
இயக்கம்
வங்க மொழி இயக்கம் வங்கதேச விடுதலையை நோக்கி முன் நகர்ந்து, விடுதலைப் பெற்று உலகத் தாய்மொழி தினமாக முடிவு பெற்றது.
வங்க மொழி
தமிழ் மொழியைப் போன்றே வங்க மொழியும் இரண்டு வகைப்பட்டது. இலக்கிய வழக்கு பேச்சு வழக்கு கொண்டது உலக அளவில் அதிக மக்கள் பேசும் மொழி பட்டியலில் ஏழாவது இடத்தை வங்க மொழி பெற்றது. இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் தேசியகீதம் வங்க மொழியில் இயற்றப்பட்டது.
மொழிப் போர்
அன்பின் தோழமைகளே
வங்க மொழி போராட்டத்தை காட்டிலும் பழமையானது தமிழ் மொழி போராட்டம். 1937 ஆம் ஆண்டு தொடங்கி நடராஜன் தாளமுத்து உயிர்களை பலி கொடுத்து கடந்த 88 ஆண்டுகாலமாக நூற்றாண்டை நோக்கி போராடிவரும் இனம் தமிழினம். ஆனால் சுதந்திர இறையாண்மை கொண்ட நாடாக தமிழ்நாடு இல்லாததால், ஐநா பொதுமன்றத்திற்கு நம் தமிழ் மொழிப் போராட்டத்தை கொண்டு சென்று பேச முடியாத சூழல். எனவே தமிழ் மொழிக்கான போராட்டம் உலகத்தின் கவனத்தைப் பெறாமல் போய்விட்டது.
அரசு விழாவாக
அன்னைத் தமிழ் மொழி காக்கும் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக கட்சிகள் மட்டுமே ஆண்டு தோறும் ஜனவரி 25 அனுசரித்து வருகிறது. இதை தமிழ் நாடு அரசு அரசு விழாவாக அனுசரிக்க சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி சட்டமாக்கப் படவேண்டும்.
எச்சரிக்கை
இந்தியா அரசு இந்திமொழியை கட்டாயமாக தமிழர்கள் மீது திணிக்க நினைத்தால் வங்கம் வழிகாட்டுகிறது. தலைநகர் டில்லிப் பட்டினத்தில் உள்ள தமிழ் நாடு இல்லம் சுதந்திர இறையாண்மை கொண்ட தமிழ்நாட்டின் தூதரகமாக மாறும் நிலை உருவாகும். ஐநா மன்றத்தில் சுதந்திர இறையாண்மை கொண்ட தமிழ்நாட்டின் கொடி பட்டொளி வீசி பறக்கும் உலக நாடுகளில் சுதந்திர இறையாண்மை கொண்ட தமிழ்நாட்டின் தூதரகங்கள் உருவாகும். இது தமிழ் நாட்டோடு நின்று விடாமல் இந்தியாவில் உள்ள இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கோரிக்கையாக வலுப்பெறும்.
ஜனநாயகம்
ஜனநாயகம் பெரியது அரசு அதற்கு கட்டுப்பட்டது ஆட்சி இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமென்றாலும் செய்வோம் என்று எதேச்சாதிகார போக்கில் நடந்து கொண்டால் ஏற்படும் விளைவுகளுக்கு சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்களே பொறுப்பு ஏற்க நேரிடும் என்பதை எச்சரிக்கின்றேன்.