Sunday, December 28, 2025

மூலக்கூறு வடிவில் வளரும் அதிசய மரம்

கெமிஸ்ட்ரி என்பது மிகச்சிறிய பிரிக்கமுடியாத பகுதியான
மூலக்கூறுகளைப் பற்றிப் படிப்பதாகும். இந்த மூலக்கூறு ஐங்கோணம்,
அறுங்கோண வடிவில் அமைந்திருக்கும். இதேபோன்று ஒரு மரமும்
அதிசயமாக வளர்ந்து வருகிறது.

இந்த மரத்தின் கிளைகள் அனைத்திலும் இலைகள் BENZENE
மூலக்கூறுபோல் அறுங்கோண வடிவில் பச்சைப் பசேலென
வளர்ந்துள்ளன. இதைப் பார்ப்பதற்கு கெமிஸ்ட்ரி ஆய்வுக்கூடத்தில்
மூலக்கூறுகளை ஆய்வுசெய்வதுபோல் அமைந்துள்ளது.

பென்சீன் என்பது ஆறு கரிம அணுக்கள் ஒரு வளையம்போல் சேர்ந்து
அமைந்திருக்கும் வடிவமாகும்.

இந்த மரத்தின் இலை வடிவத்தைப் பார்த்த ஒருவர் இயற்கையின் கரிம
வேதியியல் என்பது மனிதன் உருவாக்கிய கரிம வேதியியலைவிட மிகவும்
அழகானது. இயற்கையைக் காப்பது என்பது எப்படியென்பதை இந்த
மரத்தைப் பார்த்துக் கற்றுக்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அறிவியல் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது.

Related News

Latest News