காட்பாடியில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை பெற ஒருவருக்கொருவர் முண்டித்து சென்ற சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி செங்குட்டை பெருமாள் கோவில் பகுதியில் அமைச்சர் துரைமுருகன் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்ததார். அப்போது, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வந்திருந்த பொதுமக்களுக்கு விண்ணப்பங்களை அளிக்க டோக்கன் வழங்கியபோது அதனை பெறுவதற்காக மக்கள் முண்டியடித்து சென்றனர்.
அப்போது, ஒலிபெருக்கியில், அடுத்த முறை நடைபெறும் நிகழ்ச்சியிலும் மகளிர் உரிமைத் பெறுவதற்கான மனுக்கள் வழங்கப்படும் என்றும் அதுவரை யாரும் காத்திருக்க வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் மனுக்கள் கிடைக்காமல் ஏமாந்த பெண்கள் அதிகாரிகளை திட்டியபடியே முணுமுணுத்து புலம்பி சென்றனர்.