மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் தவிர்க்க முடியாத சில முக்கிய பிழைகள் உள்ளன. ஆதார் எண், வங்கி கணக்கு விவரம் மற்றும் செயல்பாட்டிலுள்ள மொபைல் எண் ஆகிய மூன்றும் மிகவும் முக்கியமானவை. இதில் ஏதாவது தவறாக இருந்தால், உங்கள் மொபைலுக்கு ‘பணம் வந்துவிட்டது’ என்று செய்தி வந்தாலும், உங்கள் வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட வராது.
சமீபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணின் ஆதார் எண் தவறுதலாக உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இணைக்கப்பட்டதால், உரிமைத்தொகை அந்த உ.பி. பெண்ணுக்கு செலுத்தப்பட்டது.
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தவறிவிட்ட பெண்களுக்காக, “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 28 அன்று இந்த முகாம் தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில், விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்களுக்குள் பதில் வரும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விண்ணப்பிக்க முன் கவனிக்க வேண்டியவை:
ஆதார் எண் சரியாக உள்ளதா?, வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு சரியாக உள்ளதா?, செயல்படும் மொபைல் எண் பதிவாகியுள்ளதா? இவை அனைத்தும் சரிபார்த்ததற்குப் பிறகே விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் தொகை வேறொருவருக்கு சென்றுவிடும்.