உத்தர பிரதேச மாநிலம் மஹூவார் கிராமத்தில் இயங்கி வரும் மதுபான கடை ஒன்றை பெண்கள் அடித்து நொறுக்கி முற்றுகையில் ஈடுபட்டனர்.
தங்களின் கணவர்கள் தினமும் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல், சண்டையிடுவதால் தங்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
