Wednesday, December 24, 2025

ராஜஸ்தானில் பெண்கள் கேமரா ஃபோன்களை பயன்படுத்த தடை

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில், மருமகள்கள் மற்றும் இளம் பெண்கள் கேமரா வசதி கொண்ட மொபைல் போன்களை பயன்படுத்தக் கூடாது என்று கிராம பஞ்சாயத்துகள் தடை விதித்துள்ளன. இந்த முடிவு காசிபூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமூகக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டம் அந்த கிராமங்களின் தலைவர் சுஜ்னராம் சவுத்ரி தலைமையில் நடந்தது.

பெண்களின் மொபைல் போன்களை வீட்டிலுள்ள குழந்தைகள் அடிக்கடி பயன்படுத்துவதால், அது அவர்களின் கண் பார்வையை பாதிக்கக்கூடும் என்பதே இந்த நடவடிக்கைக்கான காரணம் என சுஜ்னராம் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்மார்ட்போன்களுக்கு பதிலாக, மருமகள்கள் மற்றும் இளம் பெண்கள் பேசுவதற்காக கீபேட் (பட்டன்) போன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் தங்கள் கல்விக்காக மொபைல் போன் தேவைப்பட்டால், அதை வீட்டிற்குள் மட்டும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் வரும் ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News