சுகாதார பணியாளரை துடைப்பத்தால்  துரத்தியடித்த மூதாட்டி

384
Advertisement

உலக  நாடுகளில்  கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் சீனாவில் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது கொரோனா. குறிப்பாக  சீனாவின்  ஷாங்காய்  உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது.

மேலும் தொற்று பரவாமல் இருக்க அந்நாட்டு அரசு அதிகம் பரவும் பகுதிகளில்  முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது மேலும் கொரோனா அறிகுறி உள்ள  நபர்களை தனிமைப்படுத்துதல்  மையத்தில் வைத்து சிகிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மூதாட்டி ஒருவர்  சுகாதார பணியாளர் ஒருவரை  துடைப்பத்தால்  அடித்துத் துரத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தகவலின் படி , அந்த மூதாட்டி ஏற்கவனே தனிமைப்படுத்துதல் மையத்தில்   இருந்து மூன்று முறை தப்பியுள்ளார்.

சம்பவத்தன்று மூதாட்டி ஷாங்காய் நகரின்  தெருவில் நடந்து சென்றுள்ளார். ஆனால் அங்கு ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது .அதன் அடிப்படையில் அந்த மூதாட்டியை மீண்டும் திரும்பி செல்லுமாறு பணியில் இருந்த சுகாதார பணியாளர் ஒருவர் கூறுகிறார்.

அந்த மூதாட்டி அவரின் பேச்சை கேட்காமல், பணியாளரின் கையில் இருந்த துடைப்பக்கட்டையை பிடித்து அவரை தாக்குகிறார்.கொரோனா உத்தரவுகளை மீறுவது மூதாட்டிக்கு இது முதல் முறை அல்ல முன்னமே சொன்னதுபோல அவர் ஏற்கனவே கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து மூன்று முறை தப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக அந்த மூதாட்டியை சிறிய வண்டியில் உட்காரவைத்து கூட்டிச்சென்றனர்.

சுகாதாரப்பணியாளர் பேச்சை கேட்காமல் வீதியில் தடுப்புகளை மீறி வெளியே செல்ல முயன்ற போது , சுகாதாரப்பணியாளரை துடைப்பத்தால் தாக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூதாட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.