திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் வீரமணி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தின் பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் : “நான் வந்து சிதம்பரத்திலிருந்து கிளம்பி திருவாரூர் வரை வந்தேன். பெண்கள் அனைவரும் சந்தோஷமாக தான் வந்து கொண்டிருக்கிறார்கள். யாருக்கும் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எங்களை சுற்றியும் பெண்கள் இருக்கிறார்கள். எல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. இந்தியாவில் இருக்கிற மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிற மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. சிறு சிறு நிகழ்வுகள் என்பது மனிதர்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் நடக்கும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி சிறப்பாக இருக்கிறது” என்று கூறினார்.