ஏதாகிலும் ஒரு பிரபலத்தையோ, வரலாற்று நிகழ்வை பற்றியோ இணையத்தில் தேட பெரும்பாலானோர் பயன்படுத்தும் இணையதளமாக விளங்கும் விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மையை குறித்து பல விமர்சனங்களும் தொடர்ந்து எழவே செய்கிறது.
யார் வேண்டுமானாலும் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை எழுதவோ, திருத்தும் செய்யவோ அந்த தளம் அனுமதி அளித்து இருப்பதாலேயே தவறான தகவல்கள், இணையத்தை ஆக்கிரமிப்பதாக பரவலான கருத்தும் நிலவுகிறது.
இந்நிலையில், சீனாவை சேர்ந்த செமாவோ என்ற பெண், ரஷ்யாவுக்கு ஆதரவாக வரலாற்றை திரித்து 200க்கும் மேற்பட்ட போலி கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் பதிவிட்டிருப்பது அண்மையில் அம்பலமாகி உள்ளது.
இபான் (Yifan) என்ற சீன எழுத்தாளர், செமாவோவின் கட்டுரைகள் போலி என நிரூபித்ததை அடுத்து, விக்கிப்பீடியா அந்த பெண்ணை மேற்கொண்டு தங்கள் தளத்தில் எழுதுவதில் இருந்து ban செய்துள்ளது.
தான் வரலாற்றில் ஆர்வம் கொண்டவர் என்றும், கணவரை பிரிந்த தனிமையில் இவ்வாறு செயல்பட்டதாக, செமாவோ மன்னிப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.