சென்னை பள்ளிகரணை மயிலை பாலாஜி நகரில் 6 வீடுகளில் வட மாநில நபர் ஒருவர் புகுந்து பொதுமக்கள் அச்சுறுத்தியுள்ளார். ஒரு வீட்டில் பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார் அந்த வீட்டில் புகுந்ததும் அப்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதனால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து வட மாநில நபரை பிடித்து தர்மடி கொடுத்து கம்பத்தில் கட்டி வைத்தனர். பின்னர் பள்ளிகரணை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் போலீஸார் வந்து அவரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
முதற்கட்ட விசாரணையில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்பவதும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
