உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக கணவரை பிரிந்து சென்ற அவர் அஜ்மீரில் தனியாக வசித்து வந்துள்ளார்.
அங்குள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த பிரியாவுக்கு, அதே ஓட்டலில் வேலை செய்து வரும் அல்கேஷுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர். பின்னர் இருவரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர்.
பிரியாவின் முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தை என்பதால், அந்த குழந்தையை லிவ்-இன் காதலர் அல்கேஷ் வெறுத்து ஒதுக்கியுள்ளார். தனது காதலருக்கு பிடிக்கவில்லை என்பதால், தன்னுடைய குழந்தையை கொலை செய்ய பிரியா முடிவு செய்துள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு தூங்கிக்கொண்டிருந்த தனது குழந்தையை ஏரியில் தூக்கி வீசியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் பிரியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலையில் பிரியாவின் காதலருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.