மருத்துவமனையில் ‘ஸ்கேன்’ எடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சென்னை அருகே செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றார்.

அப்போது சி.டி. ‘ஸ்கேன்’ எடுப்பதற்காக அந்த பெண் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த சோழவரம் போலீசார் மருத்துவமனை ஊழியர் ராஜ்குமார் (32 வயது) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Related News

Latest News