நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆனைக்குடியில் எலெக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்ததில் ஜான்சி பாப்பா என்பவர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோழி முட்டைகள் அடைகாப்பதற்கான இன்குபேட்டர் அறையில் சார்ஜ் போடப்பட்ட பேட்டரிகள் வெடித்து சிதறியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.