சீனாவின் குவாங்க்டோங் மாகாணத்தை சேர்ந்த திருமணமான ஒருவர், மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். இருவரும் பலமுறை நேரில் சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர்.
சம்பவத்தன்று காதலன் வீட்டுக்கே சென்று அந்த இளம்பெண் ஜாலியாக இருந்துள்ளார். அப்போது அந்த நபரின் மனைவி திடீரென்று வீட்டிற்குள் வந்துள்ளார். இதனால் பதறிப்போன கணவர், தனது காதலியை வெளிப்புற பால்கனியில் ஒளிந்து கொள்ளுமாறு கூறி உள்ளார்.
அது அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் அந்த பெண் 10-வது மாடியில் இருந்து குழாய் பைப்பை பிடித்து இறங்கினார். இதை அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த பெண்ணை பத்திரமாக மீட்டார். இதனை அங்குள்ள குடியிருப்பு வாசிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
