Thursday, May 8, 2025

செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே, இளம் பெண் ஒருவர் ரயில் மோதி உடல் சிதைந்து கிடப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் அப்பெண்ணின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நடத்திய விசாரணையில் அந்த பெண் கண்ணகி நகரை சேர்ந்த கோட்டீஸ்வரி (22) என்பது தெரியவந்துள்ளது. செல்போன் பேசி கொண்டு தண்டவாளத்தை கவனகுறைவாக கடந்துள்ளார். அப்போது விழுப்புரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் மோதி உடல் சிதறி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

Latest news