LED பல்புகள் பொருத்தப்பட்ட சேலை உடுத்திய பெண்ணின் வீடியோ இணையதளவாசிகளை ஈர்த்துவருகிறது.
தீபாவளியன்று முழுக்க முழுக்க விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட புடவையில் சுற்றித் திரியும் அந்தப் பெண்ணின் வீடியோ ட்டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் ஒரு கடையின்முன் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்ட சேலைகளை அணிந்து ஒரு பெண் நடமாடுகிறார். பெங்களூருவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்ட இந்த சேலை உடுத்துவதற்குப் பாதுகாப்பானதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் இந்த வீடியோவைப் பார்த்த பெண்கள் சிலர் இந்த எல்இடி சேலை எங்கே கிடைக்கும் என்று கேட்டுப் பதிவிட்டுள்ளனர்.
2020 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.