சென்னை திருமங்கலம் அருகே உறவினர் வீட்டில் 10 சவரன் தங்க நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருமங்கலம் அடுத்த வாடி குப்பம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருக்கும் வசித்து வருபவர் உமாபதி. இவர் தனது வீட்டின் பீரோவில் இருந்த தங்க நகைகளை சரி பார்த்தபோது அதில் பத்து சவரன் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக திருமங்கலம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போலீசார், உமாபதி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற உறவுக்கார பெண்ணான காளீஸ்வரி என்பவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதில் காளீஸ்வரி தான் நகைகளை திருடினார் என்பது உறுதியானதால் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
