சேலம் அருகே, துணை முதல்வர் உதயநிதி பெயரை தவறாக பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி அரவிந்த்சாமி. இவரிடம் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த வித்யாராஜ் என்ற பெண் துணை முதலமைச்சர் உதயநிதி பெயரை தவறாக பயன்படுத்தி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளார்.
இதுதொடர்பாக மாற்றுத்திறனாளி அரவிந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வித்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.