Tuesday, July 29, 2025

பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? – நயினார் நாகேந்திரன் பதில்

நாகர்கோவிலில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. ஆனால் அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய எதையும் சரியாக நிறைவேற்றவில்லை. வீட்டு வரி, சொத்து வரி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத சூழல் உள்ளது.

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளது. தற்போதைய சூழலில் தேச விரோத செயலாக நாட்டுக்கு எதிராக பேசியவர்கள் மீது தமிழகத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

நிறைய கட்சிகள் எங்களது கூட்டணிக்கு வருவார்கள். நடிகர் விஜய் கூட்டணிக்கு வரவேண்டும் என்று நான் சொல்லவில்லை. எல்லா கட்சியும் ஓரணியில் சேர வேண்டும் என்று சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News