தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. மேலும் கட்சிகளை பலப்படுத்தும் வகையில் மாற்றுக் கட்சியினரை கட்சியில் சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைத்திலிங்கம், 2001-2006 மற்றும் 2011- 2016 காலகட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். இப்போது அவர் ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். மேலும் இவர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கமும் தவெகவில் இணைய இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
