மேற்குவங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்கு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மேற்குவங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி செய்தியாளர்களிடம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “2026 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லிம் எம்எல்ஏக்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றுவோம்” என்ற அவரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுவேந்து அதிகாரியின் பேச்சுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களை வெளியேற்றுவோம் என கூறுவது ஆபத்தான மனநிலை என கூறியுள்ளது.