அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷா-வை சந்தித்து பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட போது “கூட்டணி பற்றி அமித்ஷாவிடம் பேசவே இல்லை, முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினைக்காகவே அமித்ஷாவை சந்தித்தேன்” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக கூறினார். கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பு குறித்தும், டாஸ்மாக் முறைகேட்டை விசாரிக்க வேண்டும் என்றும் அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.