மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோன்தா புயலானது தீவிர புயலாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே மாலை அல்லது இரவு மோன்தா புயல் கரையை கடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மோன்தா புயலால் சென்னையில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வட சென்னையில் தொடர்ந்து மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மோன்தா புயலால் வட சென்னையில் தொடர்ந்து மழை பெய்யும், தென் சென்னையில் தூறல் மழை அடுத்த 2 மணி நேரம் வரை தொடரும். பின்னர் மழை படிப்படியாக குறைந்து நிற்கும். வட சென்னையில் 60-70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடலுக்கு மிக அருகில் உள்ள எண்ணூர் மற்றும் கத்திவாக்கம் பகுதியில் கனமழை பதிவாகியுள்ளது.
தென் சென்னையில் 30-50 மி.மீ. பதிவாகியுள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யாது” என்று பதிவிட்டுள்ளார்.
