Tuesday, February 17, 2026

ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் பரிசுத்தொகை கிடைக்குமா? – வெளியான முக்கிய தகவல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரிசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை வரும் ஜனவரி 8 ஆம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 8ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கான டோக்கன்கள் தற்போது வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகின்றன. நியாயவிலைக் கடை பணியாளர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்களை வழங்கி வருகின்றனர்.

இந்த டோக்கன் வழங்கும் பணி வரும் வியாழக்கிழமை (ஜனவரி 8) வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து, அந்தந்த நியாயவிலைக் கடைகளில் ஜனவரி 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொங்கல் பரிசுப் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News