மத்திய அரசு, கடந்த ஏப்.,8ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை, லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது. அதே போல 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தியது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியதால், அரசுக்கு கூடுதலாக 33,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, கடன் மதிப்பீட்டு நிறுவனமான ‘கேர்எட்ஜ் ரேட்டிங்ஸ்’ கணித்துள்ளது.