Friday, October 10, 2025

லாபம் அள்ளித் தருமா வெள்ளி? முதலீடு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!

நாட்டில் தங்கத்துக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் விரும்பும் முதலீடு வெள்ளி ஆகும். ஆனால், வெள்ளியில் முதலீடு செய்வது எளிதானது என்றாலும், சில முக்கிய அம்சங்களை கவனிக்காமல் விடக்கூடாது.

முதலில், விலை மாற்றங்கள் மிகவும் அதிகமாக இருக்கும். தங்கத்தைவிட வெள்ளி விலை சரிவும் ஏற்றமும் வேகமாக மாறுகிறது. ஆகவே, குறுகிய கால முதலீட்டுக்கு பதிலாக நீண்டகால முதலீட்டாகவே பார்க்க வேண்டும்.

இரண்டாவது, சுத்தம் மற்றும் தரம். சந்தையில் கிடைக்கும் வெள்ளி sterling silver என்று சொல்லபப்டும் 92.5% தூய்மை அல்லது 99.9% தூய்மை அதாவது fine silver வகைகளில் கிடைக்கிறது. வாங்கும் போது சான்றிதழ் மற்றும் பில் பெறுவது அவசியம்.

மூன்றாவது, முதலீட்டு வகைகள். வெள்ளியை நகைகள், தகடுகள், நாணயங்கள் போன்ற வடிவங்களில் வாங்கலாம். ஆனால், இவற்றை விற்கும்போது மேக்கிங் சார்ஜ் மற்றும் கழிவு குறைப்பு போன்ற இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்குப் பதிலாக, Silver ETFs அல்லது Digital Silver அல்லது தூய்மையான வெள்ளி நாணயங்கள் போன்ற ஆன்லைன் முதலீட்டு வாய்ப்புகள் பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன.

நான்காவது, சந்தை நிலைமை. உலக பொருளாதார நிலை, தொழில்துறை தேவை, நாணய மதிப்பு மாற்றங்கள் போன்றவை வெள்ளி விலையை நேரடியாக பாதிக்கின்றன. எனவே, வாங்கும் முன் சந்தை நிலையை கவனமாக ஆராய வேண்டும்.

அதனால், வெள்ளி முதலீடு சிறந்த வாய்ப்பு என்றாலும், நீண்டகால தொலை நோக்கு பார்வை, தரமான வாங்குதல் மற்றும் சந்தை ஆராய்ச்சி ஆகியவை மிகவும் அவசியமானவை. இவற்றை மனதில் வைத்தாலே வெள்ளியில் முதலீடு உண்மையான பலன்களை தரும்.

இருப்பினும் முதலீடு செய்யும் முன் உங்கள் தனிப்பட்ட நிதி ஆலோசகரின் கருத்தை கேட்டு பெறுவது நல்லது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News