முன்னாள் அமைச்சரும் கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன், இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். தலைமை செயலகம் சென்ற அவர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
செங்கோட்டையன் தவெக- வில் இணையப்போவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் இன்று மாலை, சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் உள்ள த.வெ.க. தலைவர் விஜயின் வீட்டுக்கு வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
த.வெ.க. கட்சியில் இணைவதற்கு முன்பாக தனக்கு என்ன பதவிகள் வழங்கப்படும் என விஜய் உடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துவதாகவும் இந்த ஆலோசனைகளுக்கு பிறகு அவருக்கு, அமைப்பு பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்படும் தகவல்கள் பரவி வருகிறது.
