புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவு வளருமா? என சி.பி.எஸ்.இ-ன் தேர்வு முடிவு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமர்சித்துள்ளார்.
2026 – 27 ஆம் கல்வி ஆண்டு முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் புத்தகைத்தை பார்த்தே தேர்வு எழுதும் முறையை சி.பி.எஸ்.இ அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், திருச்சியில் தாழ்தள சொகுசு பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷிடன் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவு வளருமா? என கேள்வி எழுப்பி விமர்சித்தார்.