Wednesday, February 4, 2026

கூட்டணியில் ராமதாஸ் இணைவாரா? செய்தியாளர்கள் கேள்விக்கு அன்புமணி கொடுத்த ரியாக்சன்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது இந்த சந்திப்புக்கு பிறகு உறுதி செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு அன்புமணி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். பாமகவும் இணைந்துள்ளது. இது மகிழ்ச்சியான ஒரு தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியை அமைத்துள்ளோம். இது ஒரு வலுவான கூட்டணி. எங்களின் நோக்கம் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதாகும்.

அந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். மிகப்பெரிய வெற்றியை அதிமுக கூட்டணி பெறும். அதிமுக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.

ராமதாஸ் கூட்டணியில் இணைவாரா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அன்புமணி பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

Related News

Latest News