Saturday, September 27, 2025

கடன் அக்கவுண்டை முன்கூட்டியே கட்டித் தீர்ப்பது கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்குமா? குறைத்துவிடுமா?

ஒரு கடனை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்னதாகவே முழுமையாக செலுத்தி, அந்த கணக்கை மூடும் செயல்முறையே ஆங்கிலத்தில் ‘Foreclosure’ என்று சொல்லப்படுகிறது. இதை பலர் புத்திசாலித்தனமான நிதி முடிவாகக் கருதுகின்றனர். ஏனெனில், இது கடன் சுமையிலிருந்து விரைவில் விடுபட உதவுவதோடு, நீங்கள் செலுத்த வேண்டிய வட்டிச் செலவுகளை குறைத்து கணிசமான தொகையை சேமிக்கச் செய்கிறது. இருப்பினும், இது உங்கள் கிரெடிட் ஸ்கோருக்கு சாதகமும் பாதகமும் கொண்டதாக இருக்கலாம்.

Foreclosure என்றால் என்ன என்பதை கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம். அதாவது, கடன் எடுக்கும் போது அதற்கான கால வரையறை நியமிக்கப்படும். ஆனால் அந்த காலம் முடிவதற்கு முன்பே நிலுவையிலுள்ள அசல் தொகை மற்றும் வட்டி அனைத்தையும் அடைத்து, கடன் கணக்கை மூடுவதே foreclosure ஆகும். இது வீட்டுக் கடன், கார் கடன், தனிப்பட்ட கடன் போன்ற டெர்ம் லோன்களுக்கு பொதுவாக பொருந்துகிறது. இந்தியாவில் பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இதற்கு அனுமதி வழங்குகின்றன. ஆனால் சில நிறுவனங்கள் இதற்கான அபராதத்தை வசூலிக்கவும் வாய்ப்புள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.

கடனை முன்கூட்டியே அடைப்பதன் பல நன்மைகள் உள்ளன. முதன்மையாக, நீங்கள் கடன் சுமையிலிருந்து விடுபடுகிறீர்கள். இதனால் உங்களின் Debt-to-Income Ratio மேம்பட்டு, கடன் பயன்பாட்டு விகிதம் குறைகிறது. இது நேரடியாக கிரெடிட் ஸ்கோரை உயர்த்த உதவும். மேலும், கடன் அக்கவுண்ட்டை திட்டத்திற்கு முன்னதாக மூடுவது உங்கள் பேமெண்ட் வரலாற்றை நேர்மறையாக காட்டி, கிரெடிட் ரிப்போர்ட்டில் சிறந்த பதிவை உருவாக்கும்.

இதன் விளைவாக, எதிர்காலத்தில் நீங்கள் கடன் விண்ணப்பிக்கும் போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விரைவாக அங்கீகரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். கூடுதலாக, foreclosure மூலம் நீண்டகால வட்டி செலவை தவிர்க்க முடியும் என்பதும் மிகப்பெரிய நன்மையாகும்.

முடிவில், foreclosure என்பது நிதி சுமையை குறைக்கும் நல்ல வழி என்றாலும், சில சமயங்களில் வங்கிகள் விதிக்கும் அபராதங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News